திருச்சியில் ஊரடங்கு விதிகளை மீறிவர்களிடம் அபராதம் வசூல் : போலீசார் அதிரடி நடவடிக்கை…

Author: kavin kumar
23 January 2022, 3:25 pm
Quick Share

திருச்சி : 3வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி திருச்சியில் பல்வேறு இடங்களில் வெளியே சுற்றியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை இரவு 10 மணி முதல் 5 மணி வரை பகுதி நேர ஊரடங்கு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். மேலும், தற்பொழுது பூஸ்டர் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனோ மற்றும் ஒமிகிரான் நோயை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்து.

3வது ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்சியில் முக்கிய பகுதிகளான ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மேலப்புதூர், தஞ்சை, சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. சாலைகள் தோறும் காவல் துறையினர் பலத்த வாகன சோதனை ஈடுபட்டனர். தேவையற்ற முறையில் சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். திருமணத்துக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழை காட்டியும், மருத்துவமனைக்குச் செல்வதற்கு உரிய மருத்துவ சீட்டை காண்பித்தோம் கடந்து சென்றனர். மேலும் முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்களது பணியிடத்தில் வழங்கிய அடையாள அட்டையை காண்பித்து சென்றனர்.

மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. உணவு விடுதிகளில் ஆன்லைன் மூலம் பார்சல் சேவை வழங்கி வருகிறது. மருத்துவமனைகள் மருந்துக்கடைகள் ஒரு வழக்கம் போல இயங்கி வருகிறது. பொதுப் போக்குவரத்தான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வாடகை ஊர்திகள் அனைத்தும் இயக்கப்படவில்லை. திருச்சியில் சுமார் 8 இடங்களில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 2211

0

0