முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் : இதுவரை ரூ.79 ஆயிரம் வசூல்!!

27 September 2020, 4:33 pm
cbe Fine - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகர காவல் துறை சார்பாக முகக் கவசம் அணியாதவர்களிடம் இதுவரை 79 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.

கோவை மாநகரில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியே கடை பிடிக்காதவர்களுக்கு கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் தலைமையில் போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை 5 மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் கோவை மேற்கு பகுதியில் 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 23 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கோவை மத்திய பகுதியில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 80 ஆயிரமும், தெற்குப் பகுதியில் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27,000 ரூபாயும், கிழக்குப் பகுதியில் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20,800 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த வகையில் மொத்தம் 355 வழக்கில் மூலம் ரூபாய் 79 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர போலீசார் தெரிவித்தனர்.