ஒரு நியாயம் வேணாமா..!! கடன் நிலுவை தொகைக்காக ஒரே நாளில் 73 முறை அபராதம் பிடித்தம் : தனியார் நிதி நிறுவனம் அட்டூழியம்!!

7 July 2021, 5:28 pm
Madurai - Updatenews360
Quick Share

மதுரை : கடன் நிலுவை தொகைக்காக ஒரே நாளில் 73 முறை அபராதம் பிடித்தம் செய்த தனியார் நிதி நிறுவனம் குறித்து ஆர்பிஐயிடம் விவசாயி புகார் அளித்தார்.

மதுரை திருமங்கலம் பன்னிக்குண்டை சேர்ந்த விவசாயி சிவக்குமார். மதுரை செல்லுரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 25 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். 36 மாத தவணை காலத்திற்கு வாங்கிய கடனில் மாதம் 1,069 வீதம் 6 மாத தவணை ஏறத்தாழ 6 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளார்.

இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக 9 மாத தவணைகள் செலுத்தவில்லை. 9 மாத தவணை நிலுவைக்காக ஒரே நாளில் தலா 590 ரூபாய் வீதம் 73 முறை 41,200 ரூபாய் காசோலை அபராத தொகை பிடித்தம் செய்துள்ளார்.

இது குறித்து சிவக்குமார் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனத்திடம் நேரில் சென்று கேட்ட பொழுது சரியான பதில் கூறாமலும், மேலும் இக்கடனுக்காக இன்னும் 49,000 ஆயிரம் கடன் தொகை செலுத்த வேண்டும் என தனியார் நிதி நிறுவனம் நிர்பந்தம் செய்வதாக குற்றம்சாட்டினார்.

நிதி நிறுவனத்தின் செயல் குறித்து ஆர்.பி.ஐ யிடம் மின்னஞ்சல் வாயிலாக புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆர்.பி.ஐ யிடம் புகார் அளிக்கப்பட்ட பின்னரும் நிதி நிறுவனம் 3 ஆயிரம் பிடித்தம் செய்து உள்ளதாக சிவக்குமார் தெரிவித்தார்

Views: - 200

0

0