கரும்புக்காட்டு வழியாக சடலத்தை எடுத்து சென்ற மக்கள்: சாலை வசதி இல்லாததால் தொடரும் அவலம்!!
Author: kavin kumar8 October 2021, 8:32 pm
அரியலூர்: ஒட்டக்கோவில் அருகே சாலை வசதி இல்லாததால் கரும்புகாடு வழியாக இறந்தவரின் உடலை உறவினர்கள் தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவில் அருகே உள்ள ஒ.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் இந்த கிராமத்தில் மயான கொட்டகைக்கு செல்ல பாதை இல்லாததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்தவரின் உடலை இன்று கரும்புகாடுகள் வழியாக மயான கொட்டகைக்கு எடுத்து சென்றனர். மேலும் இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து மயான கொட்டகைக்கு புதிய சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Views: - 248
0
0