எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தால் செய்யட்டும்.. மக்களுடைய பாராட்டுகள் போதும் : மழைநீர் வடிகால் ஆய்வுக்கு பின் CM ஸ்டாலின் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 12:42 pm

வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அரசின் பணிகள் பற்றி எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இருக்கட்டும், மக்கள் பாராட்டினால் போதும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது.

அதீத கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, சீர்காழி கடலூரில் நாளை ஆய்வு செய்கிறேன் அதற்காக இன்று இரவு புறப்பட்டு செல்கிறேன் என்றார். மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட உள்ளார்.

சீர்காழியில் 44 செ.மீ மழை பெய்து வெள்ள பாதிப்புகளை ஏற்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார். சென்னை ஓட்டேரி, திருவிக நகர், கொளத்தூரில் மழை பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

ஓட்டேரியில் தேங்கி உள்ள மழைநீரை ராட்சத மின்மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட நீர் உந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு கொசுவலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!