பேரறிவாளனின் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது… நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன் பேச்சு…!!

Author: Babu Lakshmanan
19 May 2022, 5:07 pm
Quick Share

பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் புழல் சிறையிலும், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த தீர்ப்பின் மூலம் சிறையில் உள்ள மற்ற 6 பேரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வக்கீல் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முருகன் வேலூர் மத்திய சிறையில் அனுமதியின்றி 2020-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்த விசாரணைக்கு இன்று மூன்றாவது நாளாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார் முருகன்.

அப்போது அவரிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து கேட்டதற்கு சிரித்த முகத்துடன் “பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது, மகிழ்ச்சி.. மகிழ்ச்சி…,” என்று அவர் இரண்டு முறை கூறினார்.

Views: - 673

0

0