மூன்றாவது முறையாக பரோலில் வந்தார் பேரறிவாளன் : கட்டியணைத்து அன்பை பொழிந்த அற்புதம்மாள்!!

By: Udayachandran
9 October 2020, 4:36 pm
Perarivalan - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் மூன்றாவது முறையாக ஒரு மாதம் பரோல் மூலம் வெளியே வந்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக் கடந்த ஆண்டு சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்..

அதன்தொடர்ச்சியாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனது மகனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். தமிழக அரசு சார்பில் வெளியிடுவதில் பல சிக்கல்கள் உள்ளது என வாதம் செய்த நிலையில் உயர் நீதிமன்றம் 30 நாள் பரோல் வழங்க உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று சென்னை புழல் சிறையில் இருந்து மூன்றாவது முறையாக பேரறிவாளன் பரோல் மூலம் 30 நாட்கள் விடுப்பில் வெளியே வந்தார்.

அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியிலுள்ள அவரது வீட்டில் தங்கி இருப்பார். பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அவரது வீட்டை சுற்றி திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் போலிசார் குவிக்கப்பட்டனர்.

2019ஆம் ஆண்டு முதல்முறையாக 2 மாதம் பரோலில் வெளியே வந்த அவர், அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு தனது தந்தையின் உடல்நலம் மற்றும் தங்கை மகளின் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோல் மூலம் வெளியில் வந்தார். தற்போது மூன்றாவது முறையாக இன்று ஒரு மாதம் சிறை விடுப்பில் வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 44

0

0