கோவிட் தளர்வுகளில் கோவிலை திறக்க அனுமதி வேண்டும் : இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 1:13 pm
Hindu Munnani Protest - Updatenews360
Quick Share

தேனி : இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களை பக்தர்களின் வழிபாட்டிற்கு தமிழக அரசு திறந்து விடக்கோரி இந்து முன்னணியினர் கோவில் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பகதர்கள் வழிபாடு செய்ய தமிழக அரசு தடைவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் நோய் தொற்று குறைந்த மாவட்டங்களில் அரசு மதுபானக்கடைகள் திறக்க அனுமத்துள்ள நிலையில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறந்து அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வழியுறித்தி இந்து முன்னணியினர் பெரியகுளம் பாலசுபரமணி கோவில் முன்பாக நின்று ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக அரசு அரசு மதுபானக்கடைகளை திறந்து கோவில்களை திறக்க அனுமதிக்கப்பட்டாமல் உள்ளதை சுட்டிகாட்டி வழிபாட்டு தலங்களை திறக்க நடவடிகை எடுக்க வேண்டும் என கோரிக்கை கோஷமிட்டனர்.

இந்த ஆர்பட்டத்தில் இந்து முன்னணியினர் முககவசம் அணிந்து சமூக் இடைவெளியை கடைபிடித்து ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 267

0

0