விடாமுயற்சி சூட்டிங்கில் விபத்து : அஜித் செய்தது சரியா? கோவை மாநகர காவல்துறையின் அட்வைஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 1:28 pm

விடாமுயற்சி சூட்டிங்கில் விபத்து : அஜித் செய்தது சரியா? கோவை மாநகர காவல்துறையின் அட்வைஸ்!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நீண்ட நாட்கள் கழித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான lyca நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த வீடியோவில் நடிகர் அஜித், மற்றும் ஆரவ் ஆகியோர் கார் விபத்திற்குள்ளாகி இருந்ததனர். நடிகர் அஜித் காரை ஒட்டி வர நடிகர் ஆரவ் அருகில் அமர்ந்திருப்பார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி இருக்கும்.

நல்வாய்ப்பாக இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் AirBag ஓபன் ஆகியதால் இருவரும் உயிர் தப்பி இருப்பர்.இந்த வீடியோ வைரலான நிலையில், கோவை மாநகர காவல்துறை அந்த வீடியோவை பதிவிட்டு Wear Seatbelt என குறிப்பிட்டு சரி என்ற குறியை குறிப்பிட்டுள்ளனர். இதனை கோவை மாநகர காவல்துறையினர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?