வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்: பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு…எவ்வளவு தெரியுமா?

Author: Aarthi Sivakumar
22 August 2021, 8:14 am
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.32 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.66 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.47 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.84 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் 8 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ 99.32 ஆகவும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ 93.66 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 886

0

0