வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி: பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு..!!

Author: Aarthi Sivakumar
25 October 2021, 8:33 am
Petrol Rate - Updatenews360
Quick Share

புதுடெல்லி: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. எனவே சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் இந்தியாவில் எதிரொலித்து வருகிறது.

அதன்படி, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரியும் விதித்து உள்ளன. இது பெட்ரோல், டீசல் விலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்று வருகிறது.

இதன் காரணமாக பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100ஐ எட்டி விட்டது. பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வரியின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் இவற்றின் விலை மாறுபடுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தது. இதன் மூலம் அவற்றின் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. அந்தவகையில் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை ரூ.107.59 ஆக இருந்தது. மும்பையில் ரூ.113.46 ஆகவும், சென்னையில் ரூ.104.52, கொல்கத்தாவில் ரூ.108.11 ஆகவும் விற்கப்பட்டது.

இதைப்போல டீசல் விலை டெல்லியில் ரூ.96.32 ஆகவும், மும்பையில் ரூ.104.38 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99.43 ஆகவும், சென்னையில் ரூ.100.59 ஆகவும் உச்சத்தில் இருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 968

0

0