வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்: பெட்ரோல், டீசல் விலை குறைந்ததா?…இன்றைய நிலவரம்..!!

Author: Aarthi Sivakumar
13 October 2021, 8:05 am
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

Speed Petrol Rate -Updatenews360

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.79 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 97.59 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று ஒருலிட்டர் பெட்ரோல் 101.79 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 97.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 210

0

0