‘இப்படியே இருந்தா நல்லா இருக்கும்’: ஆறுதல் அளிக்கும் பெட்ரோல், டீசல் விலை..!!

Author: Rajesh
19 March 2022, 8:16 am

சென்னை: சென்னையில் 135வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரின் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர கூடிய அச்சம் ஏற்பட்டு உள்ளது.

எனினும் தொடர்ந்து 135வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…