வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் அளிக்கும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!!

Author: Rajesh
1 April 2022, 8:17 am

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இதற்கிடையில் ரஷ்ய-உக்ரைன் போர் சூழல் தாக்கம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்றெல்லாம் பேசப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நேரத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலை அதிகரிக்கும் என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 காசுகளுக்கும், டீசல் 97 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 காசுகளுக்கும், டீசல் 97 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?