₹100ஐ தாண்டிய பெட்ரோல் : புதிய உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை!!

7 July 2021, 8:05 am
Petrol Price - Updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 101.06 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.91 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில், தினசரி விலை நிர்ணயம் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்துவதும், குறைப்பதுமான நிலை தற்போது இருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த விலை உயர்வால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது. அதன்படி, சென்னையில் பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 31 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 100 ரூபாய் 75 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், விலை 31 காசுகள் அதிகரித்து 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Views: - 87

0

0