புதுச்சேரியில் மீண்டும் ரூ.100ஐ கடந்த பெட்ரோல் விலை: 4 மாதங்களுக்கு பிறகு வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி..!!

Author: Rajesh
31 March 2022, 4:55 pm
Quick Share

புதுச்சேரி மாநிலத்தில் 4 மாதங்களுக்கு பின்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோல் லிட்டர் ரூ.100ஐ கடந்து விற்பனை செய்து வந்த நிலையில் நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைத்தது.

இதையடுத்து, புதுச்சேரி அரசும் பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைத்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக 1 லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும் டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் குறைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், 4 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஜ கடந்துள்ளது. அதன்படி தற்போது பெட்ரோல் லிட்டர் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 89 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 1022

0

0