அழையா விருந்தாளியாக வீடுகளுக்கு வரும் பன்றிகள் : நடவடிக்கை எடுக்காததால் வாலிபர் தற்கொலைக்கு முயற்சி!!!

19 July 2021, 8:11 pm
PIG Suicide - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் பன்றி தொல்லை தாங்க முடியவில்லை என கூறி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த வாலிபரை போலீசார் காப்பாற்றினர்.

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் பன்றி அதிகம் சுற்றி வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் மூளைக் காய்ச்சல் உட்பட பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

பன்றிகள் வீடுகளுக்குள் அழையாத விருந்தாளியாக வருகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் வேபட்டியைச் சேர்ந்த ரகுவரன் ( வயது 27) என்ற இளைஞர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அவரை அருகிலிருந்த போலீசார் காப்பாற்றினர்.

இதுகுறித்து ரகுவரன் கூறியதாவது : திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டு இருந்தபோதும் பலர் சர்வசாதாரணமாக வளர்த்து வருகின்றனர். இவற்றைசுகாதார ஆய்வாளர்களும் கண்டுகொள்வதில்லை.

இதனால் நோய்வாய்ப்பட்டு பலர் அவதிப்படுகின்றனர். பன்றி எண்ணிக்கை பல்கிப் பெருகி வீடுகளுக்குள் வருகின்றன. சுகாதாரக்கேடு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவற்றை சீராக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Views: - 96

0

0