பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

20 September 2020, 11:51 am
Pillur Dam - Updatenews360
Quick Share

கோவை : பருவ மழையால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியுள்ளதால அணையிலிருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய பில்லூர் அணை ஆனது முழு கொள்ளளவான 100 அடியில் தற்போது 97 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி
வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரியாக பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது

கடந்த ஒரு வார காலமாக பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்திலும் கேரளா காடுகளிலும் பெய்த பருவ மழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து பின்னர் கடந்த வாரம் 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது, தொடர்ச்சியாக பருவ மழை பெய்ததால் காரணமாக நேற்று இரவு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் தற்போது97 அடியை எட்டியுள்ளது, எனவே அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியாக பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் பவானிஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கக்கூடிய சிறுமுகை, மேட்டுப்பாளையம், வச்சினம்பாளையம், ஆலாங்கொம்புஉள்ளிட்ட கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க துணி துவைக்க கூடாது என மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்