கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பினராயி : வைரலாகும் ட்விட்!!

7 November 2020, 11:33 am
Pinarayi Wish Kamal - Updatenews360
Quick Share

நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இன்று வரை தனக்கென உலக சினிமாவில் தனி இடம் அமைத்து சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளவர் நடிகர் கமல்ஹாசன். தனது ஒவ்வொரு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் எண்ணற்ற ரசிகர்களை உருவாக்கிய அவரை, உலக நாயகன் என்று போற்றப்படுகிறார்.

இன்று அவர் தனது 66வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட் பலர் தங்களது வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.

கொரோனா காலம் என்பதால் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி கமல்ஹாசன் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள கமல்ஹாசனுக்கு எனது கனிவான வாழ்த்துகள், இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்‘ என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 26

0

0