சுவர் முழுவதும் பிங்க் கலர் : ஆச்சரியத்தை ஏற்படுத்திய அரியலூர் ஆட்சியர் அலுவலகம்!!

31 October 2020, 7:43 pm
Pink Color - Updatenews360
Quick Share

அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிங்க் கலரில் மாற்றப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு தமிழக அரசால் ஏற்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்ட பொதுசுகாதார துறையின் சார்பில் நிறைவுநாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைப்பெற்றது.

இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகமே பிங்க் கலராக மாற்றபட்டு இருந்தது. பிங்க் கலரில் பலூன் நுழைவு வாயில், பிங்க் கலர் கோலம், வழங்கபடவுள்ள பரிசு பொருட்கள் சுற்றியுள்ள சுவர் என மாவட்ட ஆட்சியர் அலுவலகமே பிங்க் கலராக மாறியது.

பிங்க் என்பது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான கலர் என்பதை உணர்த்தும் விதமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பிங்க கலரில் மாற்றியுள்ளதாக சுகாதார துறை சார்பில் கூறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ரத்னா, சுகாதார துறை இணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி மற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும் பிங்க் கலரில் உடை அணிந்து இருந்தது குறிப்பிடதக்கது.

Views: - 22

0

0