பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா : தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!
5 August 2020, 12:39 pmசென்னை : பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கு பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரையில் அனைத்து தரப்பு மக்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்மையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆகியோர் குணமடைந்து விட்ட நிலையில், அபிஷேக் பச்சன் மட்டும் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல, பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினரும் கொரோனா வலையில் சிக்கினர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பான லேசான அறிகுறி தென்பட்டதால் பிரபல பாடகர் பாலசுப்ரமணியம் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில், அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவர் சென்னை சூளைமேடுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.