“தயவு செய்து என்னை ஆண்மகன் என அறிவியுங்கள்“ : ஆட்சியர் அலுவலகம் வந்த நபரின் கண்ணீர் கதை!!

17 November 2020, 7:11 pm
Differenet Petition - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில்  தன்னை ஒரு ஆண்மகன் என அறிவிக்கக் கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அடுத்த மருந்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் சிங். இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

 நான் எனது பெற்றோருடன் மருந்து கோட்டை பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 2013 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் திருவனந்தபுரத்தில் வேலை செய்து வந்தேன். 

அப்போது என்னுடன் பணிபுரிந்தவர்களில் சிலர், நான் திருநங்கை எனக்கூறி  பிரசித்தி படுத்தியுள்ளார்கள். அப்போது அது எனக்கு தெரியவில்லை. நான் ஒரு ஆண்மகன், என் ஆதார் கார்டு, பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் அனைத்திலும் நான் ஆண் என்று உள்ளபடி குறிப்பிட்டுள்ளது.

இப்போது நான் எங்கு வேலைக்கு சென்றாலும் என்னை திருநங்கை என்று கூறி வருகிறார்கள். இதனால் நான் மன உளைச்சலால் பெரிதும் மனவேதனை அடைந்து மன உளைச்சலுக்கு மருந்து சாப்பிட்டு வருகிறேன்.

எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கி நான் ஆண்மகன் தான் என அறிவிப்பு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 32

0

0