+2 தேர்வில் காப்பியடித்த மாணவர்கள்.. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த அதிகாரிகள் : சிக்கிய ஆசிரியர்கள்..!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 4:57 pm

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய, 5 ஆசிரியர்கள் ‘சஸ்பெண்ட்’
செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே சாம்ராஜ் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. கடந்த 27ம் தேதி பிளஸ் 2 கணிதத் தேர்வு நடந்தது. அப்போது, தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், ஒரு சில மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது.

நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரிய வந்தது.

இதில் தொடர்புடைய முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துறை அலுவலர் செந்தில், வழித்தட அலுவலர் சீனிவாசன், அறை கண்காணிப்பாளர்கள் ராம்கி, மூர்த்தி ஆகிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!