மகளின் தோழியை மிரட்டி பாலியல் பலாத்காரம் ; அடிக்கடி வீட்டுக்கு வந்த போது காமவலை வீசிய தந்தை… மனைவியும் கைது!!

Author: Babu Lakshmanan
22 March 2023, 10:44 am

திருச்சியில் பிளஸ் டூ மாணவி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை மற்றும் தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாநகரை சேர்ந்தவர் சுரேஷ். பைனான்சியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். சுரேஷ்க்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகளை தேடி பிளஸ் 2 மாணவி ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, அந்த மாணவியை சுரேஷ் தனது வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியரின் தாய் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் சுரேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • bayilvan ranganathan talks about srikanth case நடிகர்களின் போதை பழக்கம்? தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!