கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ; குழந்தை உள்பட 3 பேர் உடல்நசுங்கி பலி..

Author: Babu Lakshmanan
22 March 2023, 10:31 am

திருச்சி ; திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி யான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக வந்த காரும் மாத்தூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகிஷாஸ்ரீ(12), சுமதி(45) டிரைவர் கதிர் (47) உட்பட 3 பேர் பலியாகினர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்த 5க்கும் மேற்பட்டோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்தவர்களின் 3பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சாலை விபத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • netizens asking that if any issue between nayanthara and vignesh shivan because of screenshot நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே அப்படி என்ன பிரச்சனை? இன்ஸ்டா பதிவால் ஏற்பட்ட களேபரம்!