பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு பெற்றுத் தருவதாக மோசடி.. பாஜக நிர்வாகி மீது பெண்கள் புகார்..!!

Author: Babu Lakshmanan
22 April 2024, 7:23 pm

மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக பெண்கள் புகார் அளித்துள்ளார்.

கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மினாகுமாரி மற்றும் இரு பெண்கள் வினோத் என்பவர் தான் பாஜகவில் உறுப்பினாராக இருக்கிறேன் என்றும், மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கி தருகிறேன் என்று கூறி, தாங்கள் உட்பட பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து அப்பெண்கள் கூறுகையில், தாங்கள் வாடகை வீட்டில் இருப்பதால் எங்கேனும் அரசு குடிசை மாற்று வாரிய வீடு கிடைக்குமா..? என்று பார்த்து கொண்டிருந்தோம். அப்போது வினோத் என்பவர் தான் பாஜகவில் இருக்கிறேன் என்று கூறி அறிமுகமானார்.

மேலும் படிக்க: நீங்க நல்லது பண்ணுனா நாங்க ஏன் அரசியலுக்கு வரோம் ; மீண்டும் திமுகவை சீண்டினாரா விஷால்?!

மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்து தருகிறேன் என்று கூறி, ஏற்கனவே தங்களால் பயனடைந்தவர்கள் என்று கூறி சிலரின் ஆவணத்தை காண்பித்தார். அவர் கட்சியில் இருக்கிறேன் என்று கூறியதாலும், ஏற்கனவே பயனடைந்தவர்கள் என்று கூறி சிலரின் ஆவணங்களை காண்பித்ததால், அதனை நம்பி, தங்களால் இயன்ற பணத்தை 1 லட்சம், 50 ஆயிரம் என்று தந்தோம்.

தற்போது அந்த பணத்தை எல்லாம் பெற்று கொண்டு வீடுகளை ஒதுக்கீடு செய்து தராமல் ஏமாற்றி விட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வினோத்தை நேரடியாக காவலர்கள் முன்பு நிறுத்தியும், FIR பதிவு செய்யாமல் CSR மட்டுமே வினோத் மீது பதிவு செய்தனர்.

தற்போது அந்த வினோத்திடம் பணத்தை கேட்டு சென்றால் எப்போதும் வீட்டில் இல்லை எனவும் கூறி வருகிறார். எனவே, வினோத் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!