பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் பாமக இளைஞர்கள் அட்ராசிட்டி… அப்செட்டில் சௌமியா அன்புமணி!!

Author: Babu Lakshmanan
1 April 2024, 2:53 pm

தர்மபுரி அருகே கோட்டப்பட்டியில் பட்டியல் இன மக்கள் வாழும் பகுதியில் பாமக இளைஞர்கள் அட்ராசிட்டி செய்ததால் வாக்குகளை சேகரிக்காமல் வேட்பாளர் சௌமியா அன்புமணி திரும்பிச் சென்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பாமக வேட்பாளராக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி இன்று கோட்டப்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இவரை வரவேற்ற கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் ஒரு சிலர், பட்டியலின வகுப்பைச் சார்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் அம்பேத்கர் சிலை முன்பு சாலையில் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி வாகனங்களில் இருந்து அதிக ஒலி எழுப்பியும், சைலன்ஸர் மூலம் வாகனத்தை அதிக ரேஸ் செய்தும் பாமக கட்சி கொடிகளை தூக்கிப்பிடித்து ஆரவாரம் செய்து இளைஞர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.

இதனால் கடுப்பான அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை காவல்துறையினர் தடுக்க முடியாமல் திணறினர். இதனைக் கண்ட முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ஆர் முருகன், வாகனங்கள் மூலம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களை அமைதியான முறையில் வாக்குகளை சேகரித்துச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தினார். பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சௌமியா அன்புமணி பட்டியலின மக்களிடையே வசிக்கும் பகுதிகளில் வாக்குகளை சேகரிக்காமல் சென்றார்.

பட்டியலின மக்களிடையே வாக்குகளை சேகரிக்காமல் சென்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி மீது அதிருப்தி அடைந்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?