சாலையோர கடைகளில் வடை சுட்டு நூதன வாக்கு சேகரிப்பு.. வாக்காளர்களை கவர்ந்த பாமக வேட்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 2:46 pm

சாலையோர கடைகளில் வடை சுட்டு நூதன வாக்கு சேகரிப்பு.. தெரு தெருவாக பிரச்சாரம் செய்த பாமக வேட்பாளர்!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா இன்று தனது முதல் கட்ட பிரச்சாரத்தை ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை தொடங்கினார்.

மேளதாளங்கள் முழங்க சாலைகளில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் வேட்பாளர் திலகபாமா பணியாரம் மற்றும் வடைகள் சுட்டு அசத்தி நூதன முறையில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் அவர் பேசுகையில் இந்த தொகுதியில் உள்ள அமைச்சர்களோ மற்ற கட்சி நிர்வாகிகளோ இந்த பகுதிக்கு கூட வந்திருக்க மாட்டார்கள். அதனால் தான் நான் இந்த பகுதியை தேர்ந்தெடுத்து எனது முதல் கட்ட பிரச்சாரத்தை துவங்குகிறேன். பிரச்சாரத்திற்கு ஐ.பெரியசாமியை அழைத்து வருகிறார்கள். அவர் ஜூலை 31ம் தேதி முதல் சிறை பறவையாகி விடுவார்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பாராளுமன்ற உறுப்பினரை கூட அழைத்து வர தைரியமில்லை. இரட்டை இலை, இரட்டை இலை என்று ஒன்று இருந்தது. அது இப்போது துரோகத்தினால் மண் மூடி கிடக்கின்றது. அவர்கள் ஒருத்தரை கூட்டி வருகிறார்கள். அவர்களுக்கு பிரதமர் யார் என்று தெரியவில்லை. இவர்கள் ஏன் தேர்தலில் நிற்க வேண்டும். ஒட்டு வாங்க வேண்டும் என்பதற்காக . ஆகையால் மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றால் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு அளித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?