பாமக எம்எல்ஏவுக்கு தொலைபேசியில் மிரட்டல்… அமைச்சர் மூர்த்தி மீது காவல் கண்காணிப்பாளரிடம் புகார்…!!

Author: Babu Lakshmanan
22 March 2024, 3:44 pm

பாமக சேலம் சட்டமன்ற மேற்கு தொகுதி உறுப்பினர் அருள் அவர்களை அலைபேசியில் அவதூறாகவும் அநாகரியமாகவும் பேசிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை தெற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

சேலம் சட்டமன்ற மேற்கு தொகுதி உறுப்பினர் மற்றும் தமிழக சட்டப்பேரவை பாமக கொரடாவாகவும் உள்ள அருள் அவர்களை அலைபேசியில் அவதூறாகவும் அநாகரிகம் பேசி பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மதுரை தெற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், ஒன்றிய தலைவர் விஜி ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், குருபாலமுருகன் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும், உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதப்படுத்தினால் கட்சித் தலைமை கூறும் முடிவை கேட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?