நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டி: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

Author: kavin kumar
1 October 2021, 8:37 pm
Quick Share

செங்கல்பட்டு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது . இதில், பாமக தலைவர் மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் , ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “தேர்தலில் தனித்து போட்டியில் யாருக்காவது வருத்தமா? தமிழகத்தை ஆட்சி செய்யவே பாமக கட்சி தொடங்கப்பட்டது. யாரோ ஆட்சியை பிடிக்க நாம் ஏன் சேவை செய்ய வேண்டும். அடுத்து நாம் தான் ஆட்சியை பிடிக்க போகிறோம். இந்த மாற்றம் உள்ளாட்சியில் தொடங்கட்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்தே போட்டி.

சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது, அடுத்த தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும்.திமுக தொடங்கி ஆட்சிக்கு வந்த அண்ணா மாநில சுயாட்சியே கொள்கை, பாமகவின் கொள்கையும் மாநில சுயாட்சி தான், ஆனால் மாநில அதிகாரங்களை டெல்லி பிடிங்கி கொண்டது. கல்வி பொது பட்டியலில் உள்ளது. கல்வி மாநில பட்டியலில் வர வேண்டும், அப்போது தான் இங்கு நீட் தேர்வு ரத்தாகும். சட்டப்பேரவையில் தற்போது நிறைவேற்றியுள்ள மசோதாவை ஜனாதிபதி ஏற்பதும் சந்தேகமே” எனக் கூறினார்.

Views: - 204

0

0