‘கொரோனாவில் இருந்து விடுபட 3 தீர்வுகள் மட்டுமே உள்ளன’ : கவிஞர் வைரமுத்து கூறுவது என்ன..?

25 August 2020, 11:17 am
Vairamuthu -updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் விடுபடுவதற்கு மூன்று தீர்வுகள் இருப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளையே தனது கோர பிடியில் வைத்துள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவும் இந்த நோய் தொற்றில் அகப்பட்டுள்ளது. இதுவரையில் 31 லட்சத்து 67 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 ஆயிரத்து 500 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரையில் இந்த நோய் தொற்றில் இருந்து 24 ஆயிரத்து 4 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

மனித உயிர் கொல்லியான கொரோனா வைரஸை, தடுக்கும் தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உலகின் முன்னணி நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நோய் தொற்று பரவ ஆரம்பித்து 6 மாதங்களாகியும் இதுவரையில் தடுப்பு மருந்துகள் எதுவும் சந்தைக்கு வரவில்லை.

இந்த நிலையில், கொரோனா வைரஸி பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட, 3 தீர்வுகளே உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-

மூன்றே தீர்வுகள்;
கொரோனா கொல்லுயிரி
தானே அழிவுறுதல்
அல்லது
வருமுன் காக்கவும் வந்தபின்
போக்கவும் மருந்தறிதல்
அல்லது
மழைத்துளிகளின் இடுக்கில்
நனையாமற் பறக்கும் கொசுவைப்போலக்
கொல்லுயிரிக்குச் சிக்காமல்
வாழ்முறை வகுத்தல்.
நான் அறிவியலை நம்புகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 60

0

0