தாதா சாஹேப் பால்கே விருதுக்கு இன்னும் சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள்… வைரமுத்து டுவிட்டால் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
27 October 2021, 1:15 pm
vairamuthu - rajini - updatenews360
Quick Share

டெல்லி : தேசிய விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

67வது தேசிய விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், கலைத்துறையில் சிறந்த ங்காற்றியதற்காக திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். இந்த விருதை எனது குருவும், ஆலோகருமான கே. பாலச்சந்தருக்கு சமர்பிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இதையடுத்து, தேசிய விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ரஜினிகாந்த்தும் பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், “பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
மத்திய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 554

0

0