தோட்டத்தில் உள்ள நாய்களுக்கு விஷம் கொடுத்து சந்தன மரம் கடத்தல் : கோவை அருகே கொள்ளையர்கள் நூதனம்!!

By: Udayachandran
15 October 2020, 2:36 pm
cbe Sandlwood - Updatenews360
Quick Share

கோவை : பேரூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நாய்க்கு விஷம் வைத்து கொன்று விட்டு, சந்தன மரத்தை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் தீத்திபாளையம் பகுதியை சேரந்தவர் குருநாதன். விவசாயி இவருக்கு செந்தமான நிலத்தில் சுமார் 40 ஆண்டுகள் பழையான சந்தனமரம் உள்ளது. மரத்தின் அருகே கூட்டில் 2 நாயைகளை வைத்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு குருநாதனின் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், பிஸ்கெட்டில் விஷம் கலந்து நாயிக்கு வைத்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த சந்தனமரத்தை கட்டிங் இயந்திரம் கொண்டு வெட்டி எடுத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனிடையே விஷம் கலந்த பிஸ்கெட்டை உண்ட ஒரு நாய் உயிரிழந்த நிலையில் மற்றொரு நாய் உயிருக்கு போராடி வருகிறது. இந்நிலையில் காலை தோட்டத்திற்கு குருநாதன் வந்த பார்த்த போது நாய் கொல்லப்பட்டு சந்தனமரம் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் பேரூர் போலீஸில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 42

0

0