கோவையில் உணவக ஊழியர்கள் மற்றும் பெண் மீது காவலர் தாக்குதல் : விளக்கமளிக்கக் கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

12 April 2021, 8:04 pm
Police Hotel Issue -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் உணவக ஊழியர்களை உதவி ஆய்வாளர் தாக்கிய சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கக் கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மோகன்ராஜ் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு கடைகளை திறக்க கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில், இந்த உணவகத்திற்கு வெளியூரில் இருந்து இரவு 10 மணியளவில் பெண்கள் சிலர் உணவு சாப்பிட வந்துள்ளனர்.

இதனால், கடை பாதி மூடிய நிலையில், அவர்களுக்கு உணவு பரிமாரப்பட்டது. அப்போது காந்திபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் ரோந்து வந்துள்ளார். கடை பாதி திறந்ததை பார்த்த காவலர், உள்ளே நுழைந்து ஊழியர்களை லத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் உணவக ஊழியர்கள் காயமடைந்தனர். மேலும், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய போது அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்த பெண் ஒருவர் நெத்தியிலும் பலமாக அடி விழுந்துள்ளது.

தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், வியாபாரிகள் போலீஸ் தொந்தரவு செய்வதாகவும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காந்திபுரம் பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், கோவையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.ஐ. தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Views: - 38

0

0