அதிவேகமாக சென்ற டிப்பர் லாரியை துரத்திய போலீசார்… ஓட்டுநரால் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2021, 2:42 pm
Accident - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அதிக பாரம் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை துரத்தி சென்ற போலீசாரை பார்த்து லாரி ஓட்டுநர் சாலையோர கடையில் லாரி புகுந்ததால் அடுத்தடுத்து விபத்து நேரிட்டது.

கன்னியாகுமரி அருகே இருக்கன்குடி பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் பாரம் ஏற்றி கொண்டு மார்த்தாண்டம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலை ஆரல்வாய்மொழி அருகே விசுவாசபுரம் வழியாக அதிவேகமாக சென்று கொண்டு இருந்தது.

இதைததை கண்ட ஆரல்வாய்மொழி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் டிப்பர் லாரியை துரத்தி பிடிக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது லாரி ஓட்டுநர், போலீஸ் துரத்தி வருவதை கண்டு பயந்ததால் தடுமாறிய டிப்பர் லாரி சாலையோரம் இருந்த சிப்ஸ் கடைக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது.

இதில் டிப்பர் லாரி பின்னால் சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த மற்றொரு லாரியும் அதன் பின்னால் வேளாங்கன்னியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு விரைவு பேருந்தும் அடுத்தடுத்து டிப்பர் லாரி பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தின் முன்பகுதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனமும் நொருங்கியது. மேலும் பேருந்து ஓட்டுநர் தியாகராஜன் மற்றும் பயணிகள் நான்கு பேர் உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அதிர்ஷ்டவசாமாக துரத்தி வந்த போலீஸ் உதவி ஆய்வாளர் உள்பட 8 பேரும் உயிர் தப்பினர். மேலும் விபத்து காரணமாக நாகர்கோயில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 464

0

0