காவல் நாயே… துணிவு இருந்தா வெளியே வாடா : சர்ச்சை கோஷத்துடன் விசிக ஊர்வலம்.. வேடிக்கை பார்த்த காவல்துறை..!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 6:36 pm
VCK - Updatenews360
Quick Share

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு புகாரில், ஆரணி காவல் நிலையத்திற்குள் புகுந்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் அவதூறாக பேசியிருந்தார்.

இந்த விஷயம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பாஸ்கருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜாமீன் பெற்று வெளியே எடுக்கும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஜனவரி 28ம் தேதியான நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களோடு ஆரணி நகருக்கு வருகை தந்த விசிக பாஸ்கரன், காவல் நிலையம் முன்பு தனது தொண்டர்களால் கோஷமிடப்பட்ட பின்னர் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார்.

அவரது ஆதரவாளர்கள் “எச்சை பிழைப்பு காவல் நாயே, துணிவு இருந்தால் வெளியே வாடா., வீடியோவா எடுக்குற.. எச்சரிக்கை இது எச்சரிக்கை” என ஆர்ப்பரித்து விசில் அடித்துக்கொண்டு, கத்திகொண்டே சென்றார்.

இந்த சம்பவம் நடைபெறும் போது, நிகழ்வித்தில் இருந்த காவலர்கள் ஒன்றும் செய்து அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

Views: - 127

0

0