சாலைகளில் படுத்திருக்கும் மாடுகளை திருடும் மர்ம கும்பல்: சிக்கிய சிசிடிவி காட்சி!

Author: kavin kumar
10 February 2022, 6:07 pm
Quick Share

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் சாலைகளில் படுத்திருந்த 8 மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேரூராட்சியானது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையராக கீதா பொறுப்பேற்றார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரின் மீது சாலையில் சுற்றித்திரிந்த பன்றி மோதியதில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதன் எதிரொலியாக நகராட்சி ஆணையர் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக அதனை அப்புறப்படுத்த வேண்டுமென்றும், மீறுபவர்கள் மீது ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த அறிவிப்பு வெறும் வெற்று அறிவிப்பாக இருந்ததால் தொடர்ச்சியாக நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தன. மேலும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் படுத்து உறங்கின. இந்தநிலையில், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் படுத்து உறங்கிய மாடுகள் 8க்கும் மேற்பட்டவையை மர்மநபர்களால் இரவு நேரங்களில் வாகனங்களில் கட்டி ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து இப்பகுதி மக்கள் சிசிடிவி காட்சிகளுடன் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 789

0

0