இதுக்கெல்லமா கொலை பண்ணுவாங்க!…நாய் குரைத்த தகராறு கொலையில் முடிந்த விபரீதம்….!!

28 October 2020, 8:40 am
crime - updatenews360
Quick Share

புதுச்சேரி: நாய் குரைத்த தகராறில் பெயிண்டரை குத்திக் கொலை செய்ததாக முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுவை கருவடிக்குப்பம் கங்கையம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் பிரதாப். 21 வயதான இவர் பெயிண்டர் மற்றும் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (60). தனியாக வசித்து வரும் இவர் தனது வீட்டில் நாய்கள் வளர்த்து வந்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்

இந்நிலையில் பிரதாப் தெருவில் சென்றபோது அவர்களை பார்த்து விநாயகம் வளர்த்து வந்த நாய்கள் குரைத்ததால், ஆத்திரமடைந்த பிரதாப் நாய்களை கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த விநாயகம், கல்லால் நாய்களை தாக்கியது ஏன்? என கேட்டபோது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த விநாயகம் கையில் வைத்து இருந்த சிறிய கத்தியால் பிரதாப்பை குத்தியுள்ளார். இதனைதொடர்ந்து பிரதாப் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அங்கிருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரதாப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, வீட்டில் பதுங்கி இருந்த விநாயகத்தையும் கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நாய் குரைத்த தகராறில் ஆரம்பித்த பிரச்சனை கொலையில் முடிந்த சம்பவம் லாஸ்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0