‘ஜி‘ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனத்தை சோதனை செய்யும் போலீசார் : உடனே அகற்ற அறிவுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 2:14 pm
G sticker - Updatenews360
Quick Share

சென்னை : அரசு பணியில் உள்ளவர்கள் சொந்த வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள G ஸ்டிக்கர் அகற்ற போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அரசு வாகனம் என்பதை குறிக்கும் வகையில் வாகன பதிவு எண்ணில் ஜி என பதிவிடப்பட்டிருக்கும். மேலும் அரசு பணியில் உள்ளவர்கள் பலர் தனது சொந்த வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை பயன்படுத்தி வலம் வருகின்றனர்.

இந்தநிலையில் அரசு பணியாளர்கள் சொந்த பயன்பாட்டுக்காக வாகனங்களில் ஜி என்ற ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல போலீசாரும் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் போலீசார், ஜி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்களை சோதனை செய்தும், ஸ்டிக்கரை அகற்றியும் வருகின்றனர். ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்த வாகனங்களை மடக்கி அதன் உரிமையாளர்கள் பற்றிய விபரம் மற்றும் வாகனத்தை புகைப்படத்தை எடுத்து உடனடியாக ஸ்டிக்கை அகற்ற அறிவுறுத்தி வருகின்றனர்.

Views: - 345

0

0