தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சஜாக் ஆபரேஷன் : கடல் வழியாக காவல்படையினர் ரோந்து!!
25 January 2021, 1:21 pmQuick Share
கன்னியாகுமரி : குடியரசு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று கடலோர காவல்படையினர் சஜாக் ஆபரேஷன் என்னும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவலாம் என்ற கோணத்தில் கன்னியாகுமரி கடலோர காவல்படையினர் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் கடற்கரைப் பகுதியை ஒட்டி இருப்பதாலும் அங்கும் தீவிரவாதிகள் ஊடுருவல் தடுக்க சஜக் ஆப்பரேஷன் என்னும் படகு மூலம் கடலோரப் பகுதிகளை கண்காணிக்கும் ரோந்து பணி இன்று காலை துவங்கி மாலை வரை நடக்கிறது.
Views: - 0
0
0