மணல் கடத்தலை தடுத்த போலீசார்: டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற திமுக பிரமுகர் கைது

Author: kavin kumar
18 August 2021, 8:58 pm
Quick Share

செங்கல்பட்டு: மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முயன்ற போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த புகாரில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள ஓரத்தி ஆற்றில் திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் ஏம்பளம் ஏரியில் மணல் அள்ளுவதாக ஒரத்தி காவல் துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட ஒரத்தி போலீசார், ஏம்பளம் ஏரியில் டிராக்டர் மூலம் மணல் அள்ளுவதை கண்டு அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்,அப்போது ஏரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த வடமணிபாக்கம் திமுக கிளைச் செயலாளர் வடிவேலு என்பவர், போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர், அங்கிருந்து அவர் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து தப்பியோடிய திமுக கிளைச் செயலாளர் வடிவேலை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், மதுராந்தகம் அருகே பதுங்கி இருந்த வடிவேலை போலீசார் கைது செய்தனர். அவர்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 206

1

0