பசும்பொன்னில் திரண்ட அரசியல் கட்சிகள்… முத்துராமலிங்க தேவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை…!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 10:44 am

பசும்பொன்னில் திரண்ட அரசியல் கட்சிகள்… முத்துராமலிங்க தேவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை…!!!

சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?