பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

3 February 2021, 7:23 pm
Quick Share

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு வருகிற 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மகளிர் நீதிமன்ற தலைமை நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் உட்பட பலரை காதல் வலை வீசி அவர்களை உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து அதன் மூலமாக மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் மாதர் சங்கம். கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இதில் ஜனவரி 5ம் தேதி சிபிஐ விசாரணையில் பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் அருளானந்தம், பைக் பாபு, ஹாரன் பால், உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் கோவை கோவை அருகே உள்ள கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இன்றோடு அவர்களுடைய நீதிமன்ற காவல் முடிவடைவதால் பாதுகாப்பு கருதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக போலீசார் அவர்களை நீதிபதி பார்வைக்கு ஆஜர்படுத்தினர். நீதிபதி வருகிற 17-ஆம் தேதி வரை 3 பேருக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து மகளிர் நீதிமன்ற தலைமை நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேர் வருகின்ற 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

Views: - 0

0

0