முருகனுக்கு ஒரு முகமல்ல.. 88 ஆயிரம் முகம் : மக்கள் ஆசி யாத்திரையில் பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2021, 6:37 pm
Murugan Pon Radha - Updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூரில் மக்கள் ஆசி யாத்திரை இரண்டாம் சுற்றுப்பயணத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

மத்திய அரசின் திட்டங்களை மக்கள் அறியச் செய்யும் நோக்கில், ’மக்கள் ஆசி யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 2-ம் நாளாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை , மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் , பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு :

திமுக வினர் பொய்யான சமூக நீதியை பரப்பி கொண்டிருக்கிறார்கள். உண்மையான சமூக நீதியை பா.ஜ.க வில் தான் பார்க்க முடியும் என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு :

கடந்த சட்டமன்ற தேர்தலில்.முருகன் போட்டியிட்ட போது 88000 வாக்குகள் அள்ளித்தந்து ஆதரவளித்த அனைவருக்கும் நல்ல செய்தி என்னவென்றால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் 88000 பேர் தோற்றுபோய்விடக்கூடாது என்பதற்காகா பிரதமர் அவரை அமைச்சராக்கியிருக்கிறார் என்றார்.

முருகன் ஒரு முகமல்ல , 6 முகமல்ல 88000 பேரின் முகமாக அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.
மோடி ஒன்றை சொல்லமாட்டார் சொல்லிவிட்டார் செய்யாமல் விடமாட்டார். மோடிக்கு ஒட்டுமொத்த தமிழகமும் துணையாக இருப்பதை காட்டும் வகையில் யாத்திரை அமையட்டும் . மோடியின் ஆளுமை தமிழகத்திலும் அமைய உழைப்போம் என்றார்.

எல்.முருகன் பேச்சு :

பிரதமர் மோடியே தாராபுரத்திற்கு வந்து தேர்தலின் போது வாக்கு கேட்டார். சொற்ப வாக்குகளில் தான் வெற்றி வாய்ப்பு போனது. அப்படி இருந்தும் தமிழகத்தில் இருந்து ஒருவரை மத்திய அமைச்சர் ஆக்கியுள்ளார் பிரதமர்.

ரயில் பாதை வேண்டும் என தாராபுரத்தில் கோரிக்கை உள்ளது. தாராபுரம் வளர்ச்சி தான் நம்முடைய வளர்ச்சி. தாராபுரத்தில் ரயில் வழித்தடம் கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார்.

Views: - 583

0

0