இரு குழந்தைகள், மனைவியை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்… உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு எடுத்த விபரீத முடிவு

Author: Babu Lakshmanan
8 July 2022, 1:04 pm

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியை பூர்விகமாக கொண்ட தியாகராஜன். இவருக்கு வயது 38. ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், குடும்பத்துடன் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தார்.

இதனிடையே கடன் சுமை காரணமாக ஆட்டோ ஒட்டவில்லை. மேலும், கடன் காரணமாக அவர் ஒட்டிக்கொண்டிருந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, கடந்த இருபது மாதங்களாக எலக்ட்ரிசன் கூலி தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் அவரது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எங்கள் அனைவரையும் அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். தகவலை கேட்ட உறவினர்கள் உடனடியாக தியாகராஜன் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தியாகராஜன், அவரது மனைவி பச்சைவாலி (34), 7 வயது பெண், மற்றும் 3 வயது ஆண் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கணவர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் பிரேதங்களை கைப்பற்றி புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடற் கூறாய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் இடத்தில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ராமேஷிடம் விளக்கம் கேட்டபோது, “கடன் சுமை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் இருவரை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம். முழுமையான விசாரணை நிறைவு பெற்ற பின்னரே முழு விவரம் தெரியவரும்,” என்று அவர் தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!