ரயில் பயணிகளை அதிர்ச்சியடையச் செய்த முதியவர்… உயர்மின்கம்பத்தின் மேல் கேஸுவல் வாக்… அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 11:14 am
Quick Share

புதுச்சேரியில் ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் முதியவர் ஒருவர் ஏறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இன்று காலை புதுச்சேரி ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் ஏறி நின்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், இது குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர்.

பின்னர், போலீசார் அந்த முதியவரிடம் பேசி அவரை கீழே வரவழைத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த பாண்டுரங்கன் (65) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் எதற்காக புதுச்சேரி வந்துள்ளார். அவரின் உறவினர்கள் குறித்தும் போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் ஒருவர் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் ஏறிய நின்ற காட்சி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Views: - 551

0

0