வருமானமே இல்லை…! அதிகாரிகளுடன் டிஸ்கஸ் செய்த முதல்வர்

8 August 2020, 9:43 am
Narayanasamy updatenews360
Quick Share

புதுச்சேரி: கொரோனா தொற்றால் அரசாங்க வருமானத்தில் 40%  வருவாய் குறைந்து விட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை தாக்கிய கொரோனா, யூனியன் பிரதேசமான புதுச்சேரியையும் கடுமையாக பாதித்தது. இந் நிலையில் நிதிநிலை குறித்து தலைமைச் செயலாளர், உயரதிகாரிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது;  கொரோனா தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருமானம் குறைந்து இருக்கிறது. மத்திய அரசு தரும் இழப்பீடு நான்கு மாதமாக வரவில்லை.

14 சதவீத இழப்பீடு, 560 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 41 சதவீதம் வருவாய் கேட்டு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அந்த கடிதத்துக்கு பதிலே இல்லை.

புதுச்சேரியில் 70 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். அவர்களில் 55 பேர் 60 வயதை தாண்டியவர்கள். மற்றவர்கள் புற்றுநோய், சிறுநீரக நோய் என பல வியாதிகளை கொண்டவர்கள். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தேசிய அளவில் ஒப்பிடும் போது குறைவு தான் என்று கூறியுள்ளார்.