பாலமேட்டில் இன்று சீறிப்பாயும் காளைகளும், காளையர்களும்… குவிந்து கிடக்கும் பொங்கல் பரிசுகள்..!!!

15 January 2021, 7:27 am
Quick Share

மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாலமேடுவில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் 780 காளைகள் களமிறங்க உள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரத்தில் நேற்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இந்த நிலையில், 2வது நாளாக பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில், 783 காளைகளும், 649 காளையர்களும் களமிறங்க உள்ளனர். ஒவ்வொரு குழுவாக களமிறக்கப்படும் காளையர்களில் சிறந்த வீரருக்கும், அதேபோல, சிறந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பார்வையாளர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டையொட்டி 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Views: - 7

0

0