தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு.. ஒரு கிலோ மல்லிகை ரூ.400க்கு விற்பனை!!!

Author: Babu Lakshmanan
6 May 2022, 3:46 pm
Quick Share

கன்னியாகுமரி : தோவாளை பூமார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென சரிந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற டாக்டர் எம் ஜி ஆர் மலர் சந்தை உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.

இதை உள்ளுர் மற்றும் கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் பூக்களின் தேவை குறைந்துள்ளதால் இன்று தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிந்து காணப்பட்டது. அதன்படி கடந்த வாரம் ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையான மல்லிகை பூ இன்று மளமளவென சரிந்து ரூ.400 க்கு விற்பனையானது.

அதேபோல், அரளிப்பூகழனி(கிலோ)ரூ.120க்கும், பிச்சி ரூ.1500, மல்லிகை ரூ.400, கனகாம்பரம் ரூ.750, வாடாமல்லி ரூ. 60, சிவப்பு கேந்தி ரூ.70, சம்பங்கி ரூ.170, முல்லை ரூ.1200, ரோஜா (100 எண்ணம்) ரூ.20, பட்டன்ரோஸ் கிலோ ரூ. 130, தாமரை (100 எண்ணம்)ரூ.200, பச்சை ரூ. 8, கோழிப்பூ ரூ. 50, கொழுந்து ரூ. 80, மருக்கொழுந்து ரூ. 100, மஞ்சள் கேந்தி ரூ.60, சிவந்தி (மஞ்சள்)ரூ.200, வெள்ளை சிவந்தி ரூ. 400, ஸ்டெம்புரோஸ் 1 கட்டு ரூ. 300க்கும் விற்பனையானது.

Views: - 905

0

0