இன்ஸ்டாகிராமில் பூத்த ரெண்டு காதல்…. முன்னாள் காதலனை நையப்புடைக்க Bouncerஆக மாறிய புதுக்காதலன் : வீதிக்கு வந்த கசமுசா!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 2:47 pm
Kanyakumari Instagram Love -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மண்டைக்காடு அருகே இன்ஸ்டா காதலியின் முன்னாள் காதலனை கடத்தி சென்று போதை கும்பலுடன் தாக்கிய வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் போதை கும்பல் ஒன்று வாலிபர் ஒருவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கும் பரபரப்பு வீடியோ ஒன்று கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது

இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான அந்த வாலிபர் யார்? அவரை தாக்கிய போதை கும்பலுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்

உத்தரவின் பேரில் விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார் தாக்குதலுக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்த 19-வயதான கல்லூரி மாணவன் ஷைஜூ பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஷைஜூவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் வாகவிளை பகுதியை சேர்ந்த அதுல்யா என்ற கல்லூரி மாணவிக்கும் ஒரு வருடத்திற்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது

இன்ஸ்டா வில் பழகி காதலை வளர்த்து கொண்ட இருவரும் நேரில் சந்தித்து அடிக்கடி ஜோடியாக ஊர் சுற்றுவதை வாடிக்கையாக்கியுள்ளனர்.

அதுல்யா வசதி படைத்தவர் என்பதால் தாராளமாக காதலன் ஷைஜூவுக்கு விலையுயர்ந்த பரிசு பெருட்களையும் வாங்கி கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஷைஜூ அதுல்யாவிடம் தனக்கு அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி அவருடைய தங்க சங்கிலி மோதிரம் என 4-சவரன் தங்க நகைகளை கழற்றி வாங்கியுள்ளார்.

ஆனால் அதற்கு பின் ஷைஜூ, அதுல்யா உடனான தொடர்பை முற்றுலுமாக துண்டித்த நிலையில் பலமுறை அதுல்யா செல்போனில் தொடர்பு கொண்டும் ஷைஜூ கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதுல்யா விற்கு மீண்டும் இன்ஸ்டா மூலம் கருங்கல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும்
கடந்த மாதம் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட அதுல்யா பள்ளியாடி அருகே உள்ள தேனீர் கடைக்கு அவனை வரவழைத்து தன்னை காதலித்து வந்ததை மறைத்து நாடகமாடி அவனை காதலிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் சைஜூ தன்னுடைய நண்பன் என்றும் சதீஷ்குமாரிடம் கூறிய அதுல்யா, அவன் என்னை ஏமாற்றி 4 சவரன் தங்க நகைகளை வாங்கியதாகவும் எனவே சைஜூவிடமிருந்து நகைகளை திரும்ப வாங்கி தருமாறு அதுல்யா சதீஷிடம் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த சைஜூ, அதுல்யாவின் தாயிடம் சென்று இரண்டாவது காதல் குறித்து பிகார் கூறியுள்ளார். இதையறிந்த அதுல்யா நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

காதலியின் கண்ணில் கண்ணீர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத புதுக்காதலன் சதீஷ், அவரை ஆறுதல் கூறி அனுப்பி வைத்ததோடு கடந்த மாதம் 20-ம் தேதி அவரது நண்பர் மூலம் சைஜூவை கடத்தி சென்று மண்டைக்காடு பகுதியில் உள்ள இடுகாட்டில் வைத்து தனது போதை நண்பர்களுடன் சேர்ந்து சைஜூவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த பரபரப்பு வாக்குமூலத்தை போலீசாரிடம் கண்ணீருடன் கூறியுள்ளார் சைஜூ. இதனையடுத்து அதுல்யாவிடம் விசாரணை நடத்திய மண்டைக்காடு போலீசார் சம்பவம் உண்மை என தெரியவரவே ஷைஜூ அளித்த புகாரின் பேரில் அதுல்யாவின் இரண்டாவது இன்ஸ்டா காதலன் சதீஷ்குமார், அவரது நண்பர்கள் ஆனந்தராஜ், விஷ்ணு., சஞ்ஜய்., ராகுல் ஆகிய 5-பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு அதுல்யாவின் இரண்டாவது காதலன் சதீஷ்குமார்., அவரது நண்பர் ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தேடி வருகின்றனர். இன்ஸ்டா காதலியின் முன்னாள் காதலனை தாக்கி வாலிபர் சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 866

0

0